இரவின் நிசப்தத்தை துரத்திவிடுகிறது
சூரியனின் ரீங்காரம்
ரயிலில் அடுக்கித் தள்ளப்படும்
உணர்ச்சியற்ற பிம்பங்கள்
நடுவில் நானும் ஓர் எலியாய்
ஆடிக் கொண்டு
சுண்டெலிகள் தலையாட்ட
பெருச்சாளிகள் பேசுகின்றன
பேசுகின்றன பேசுகின்றன
புரிந்தும் புரியாமல்
ஆறிப்போன மதிய உணவைப் போல
சுவையற்ற பேச்சுக்கள்
உறக்கத்திற்க்காகக் காத்திருக்கிறது என் காலம்
கிழக்குக் கரைத் தடங்களில் மிதிவண்டி ஓட்டியும்
உணவக நுழைவாயில்களில் வரிசை காத்தும்
தொலைக்காட்சி முன்பு வாயடைத்தும்
பொழுதைக் கழிக்கின்றன எலிகள் கூட்டம்
புலியாகவும். நாயாகவும். விண்வெளி உயிரினமாகவும்
சில மாயப்பொழுதுகளில் மட்டும்
மனிதராகவும் வேஷம் போட வழிகொடுப்பது
இந்தத் துக்கமில்லா
நித்திரை யாத்திரைகள் மட்டும் தான்
Harini V is a bilingual spoken word poet who has produced poems in English and Tamil. Her Tamil poems have featured in
Nithimisai Nagarum Koorangazhkal, the
SG 50 Singapore Women poetry anthology, and
Love at the Gallery 2017. She represented her college in CUPSI 2017 in Chicago. She won the National Poetry Competition in 2015 in the Tamil category. She has worked closely with NLB, NAC and The Arts House to organize literary panels and events. In 2019 she was awarded the Young Role Model Award by Mediacorp’s Tamil Seithi for her contributions to the Tamil community.
Shalani Devi is currently pursuing a degree in English Literature at Nanyang Technological University, and has gained insightful knowledge of Singapore’s arts and literary through her work with The New Paper, Ethos Books and Sing Lit Station. An avid lover of cartoons and all things horror, her work has appeared in the anthology
Seven Hundred Lines: A Crown of Found/Fount Sonnets. She is constantly reworking her craft, and writes whenever she can.