a rat’s pilgrimage | ஒர் எலியின் யாத்திரை

By and | 31 October 2020

இரவின் நிசப்தத்தை துரத்திவிடுகிறது
சூரியனின் ரீங்காரம்

ரயிலில் அடுக்கித் தள்ளப்படும்
உணர்ச்சியற்ற பிம்பங்கள்
நடுவில் நானும் ஓர் எலியாய்
ஆடிக் கொண்டு

சுண்டெலிகள் தலையாட்ட
பெருச்சாளிகள் பேசுகின்றன
பேசுகின்றன பேசுகின்றன
புரிந்தும் புரியாமல்

ஆறிப்போன மதிய உணவைப் போல
சுவையற்ற பேச்சுக்கள்

உறக்கத்திற்க்காகக் காத்திருக்கிறது என் காலம்

கிழக்குக் கரைத் தடங்களில் மிதிவண்டி ஓட்டியும்
உணவக நுழைவாயில்களில் வரிசை காத்தும்
தொலைக்காட்சி முன்பு வாயடைத்தும்

பொழுதைக் கழிக்கின்றன எலிகள் கூட்டம்

புலியாகவும். நாயாகவும். விண்வெளி உயிரினமாகவும்
சில மாயப்பொழுதுகளில் மட்டும்
மனிதராகவும் வேஷம் போட வழிகொடுப்பது
இந்தத் துக்கமில்லா
நித்திரை யாத்திரைகள் மட்டும் தான்

This entry was posted in 99: SINGAPORE and tagged , . Bookmark the permalink.

Related work:

Comments are closed.