சனிக்கிழமை மேய்வதற்கு விட்டுப்போன
முதலைகள் மத்தியானங்கள் தின்கின்றன.
அப்போதெல்லாம் போலிப் பற்களை மாட்டிக்கொண்டு
தாத்தா கடை வீதிக்குக் கிளம்புவார்.
அந்த இடங்களில் இப்போது
கூடாரங்கள் போட்டு முதலைகள் விற்கிறார்கள்.
திடீரென்று காற்று வீச
ஓரங்களை இழுத்துப் பிடித்துக் கொள்ளும்
மரிலீன் மன்றோ கூடாரங்கள்,
முதலைகளால் பிய்த்துத் தின்னப்பட்ட
இடங்கள் தவிர மற்றபடி
கலகலப்பாகத்தான் இருக்கின்றன.
தாத்தா இப்போது இருந்திருந்தால்
இதே கடைவீதியில் பலூன்கள் விற்றிருப்பார்.
நீ முதலைகளை எங்கே வாங்கலாம் என்கிறாய்.
பணத்தாள்கள் அவசரமாய்த் திணிக்கப்பட்ட
பர்ஸைப்போல் வாய் பிளந்து கிடக்கிறது
சனிக்கிழமை மத்தியானம்.
Sithuraj Ponraj lives and works in Singapore. He writes in English, Tamil and Spanish. He was awarded the Singapore Literature Prize (SLP) for Tamil prose fiction and Merit Prize for Tamil poetry in 2016. Sithuraj has written 2 novels, 3 short story collections, a collection of literary essays, 3 poetry collections and 2 YA books in Tamil from 2016-2020. He has currently completed his first English collection ('Keynesian Crocodiles') and untitled short story collection in English. Both will appear in late 2020. His novel 'The Wooden Elephant' and poetry collection "It is Easy to be an Italian" have both been shortlisted for the 2020 Singapore Literature Prize in the Tamil prose and Tamil poetry categories respectively.
Ruth Tang (they/them) is a playwright and poet, raised in Singapore and based in New York City.