நெகிழிப் பூக்கள் வேண்டாம்
நெடுவயலெங்கும் நஞ்சடிக்க வேண்டாம்
பூச்சிகள் நுகரா பழங்கள் வேண்டாம்
புகைக்கும் மனிதனும் ஆலையும் வேண்டாம்
அணுவைப் பிளந்த ஆற்றலும் வேண்டாம்
ஆற்றின் மணலில் அடுக்குமாடி வேண்டாம்
இம்மண் பயனுற மானுடா
நீயெதுவும் செய்ய வேண்டாம்
அப்படியும் உன் மனசாட்சி குத்தினால்
வட்டியேதும் வேண்டாம்
அசலை மட்டும் திருப்பு
நிழல்மரமொன்றின் விதையினை நட்டுப் போ
உரமென அதற்குன் உடலினை இட்டுப் போ
Raju Ramesh has been a Permanent Resident in Singapore for the past 20 years, working in the IT field and indulging in classical and modern Tamil poetry. He has been associated with Tamil poetry groups such as
Kavimaalai Singapore,
Thangameen etc. In 2015, he was awarded the Kavimaalai Singapore Young poet award, and in 2016 won first prize in both the Tamil Language Festival poetry competition organised by the Singapore Indian Association, as well as the National Poetry Festival Competition. He is also the double recipient of the Honorary prize in the Singapore Golden Point Award from NAC. His works have been published in local Tamil dailies and magazines, and he is currently working on translations in Tamil and English.
Anurak Saelaow has been published in
Cha: An Asian Literary Journal,
Hayden's Ferry Review,
Quarterly Literary Review Singapore,
Cultural Weekly,
The Kindling,
Ceriph, and elsewhere. He is the author of one chapbook,
Schema (The Operating System, 2015), and holds a BA in creative writing and English from Columbia University.