1964

By and | 31 October 2020

முச்சந்தியில் நிற்கும் கருங்கல் கட்டிடத்திற்கு அவர்கள் சாயம் பூசினார்கள்/பூசிய சாயத்தில் மாட்டிக் கொண்டன சில காகங்கள்/அணுகுண்டு வெடித்தபின் பதிந்த நிழலாகக் கட்டிடச் சுவர்களில் இன்னமும் சிறகை விரித்தபடி இருக்கின்றன/இன்றுவரை கறுப்பாக காகங்கள்/சாயம் என்றாலே வண்ணங்கள்தானே என்று சிரித்தான் சாயக்காரன்/அதனால்தான் பற்ற வைத்தார்கள்/பல வண்ணங்களில் வெடித்து எரிகின்றன காதுவைத்த வீதிகள்/உங்களுக்கு என்ன தெரியும்/இது எங்கள் கருங்கல் கட்டிடம்/இதன் முச்சந்தி முனைகள் இப்போது மாறிவிட்டன/அவைதாம் கூரிய பல் உடைய சுறாக்கள்/அவற்றின் பெயர் சாயம்/இந்த முறை வீதிகளுக்குக் காது முளைக்கவில்லை/ஆனால் சூரியன்போல் கண்கள் இருந்தன/மூக்கு நீளமாக வளர்ந்தவர்கள் மீசை உள்ளவர்களை முச்சந்திகளைத் தாண்டி அழைத்துப் போகிறார்கள்/அவர்கள் மூக்குகளைப் பார்த்துச் சூரியன் சிரித்தது/அது காகத்தின் சத்தம் போலவும், கருங்கல் கட்டிடம் போலவும், தீவு போலவும், வீடு போலவும் இருந்தது/அவர்களோடு பறந்து சென்றன மீண்டும் வளர்ந்த அலகுகளில்/பல வண்ணங்களில் சாயம் அடித்த காகங்கள்.

 


This entry was posted in 99: SINGAPORE and tagged , . Bookmark the permalink.

Related work:

Comments are closed.