Briefly, in the news | செய்திகளின் சாரம்

By and | 31 October 2020

நேரம் சரியாக 2.32
சிங்கப்பூருக்கு சரியாகவும்
இந்தியாவுக்கு சரியில்லாமலும்
அமெரிக்காவில் வேகமாகவும்
லாவோஸ்ஸில் மெதுவாகவும்.

ஆசிய கண்டம்
ஒரு கண்டத்திலிருந்து மீள
ஆப்ரிக்க கண்டம்
அதே கண்டத்திலேயே விழுந்தது.

கண்டதையெல்லாம் –
மன்னிக்கவும் –
கண்டுக்கொண்டதை எல்லாம் அச்சிட
இமைக்காமல் அவதானித்திருந்தன
ஒரு செய்தி நிலையத்தின் கண்கள்.

நொடிக்கு நொடி
நெருக்கடி ஆவிகள்
அந்த அடுக்குமாடி கட்டிடத்தில்
அடக்கம் பெறாமல் சுற்றித் திரிந்தன

அமைதியாய்
ஒரு செவிட்டுக் காகம்
இன்பமாய்
அக்கட்டிடக்கூரையின் மேல் மலம் கழித்தது.

‘செய்திகளின் சாரம்”/”Seithigalin Saaram’ by Ayilisha Manthira was the second prize winner of the NAC Golden Point Award 2019.

This entry was posted in 99: SINGAPORE and tagged , . Bookmark the permalink.

Related work:

  • No Related Posts Found

Comments are closed.